நவீன அபாயாக்களும் சீரழியும் இளம் சமூகமும்

பெண்கள முழு உடலையும் மறைத்து அணியும் ஆடைக்கே அபாயா என்று செல்லப்படும்.

பெண் விட்டினுல்ளே இருப்பதில்தான் அவளுக்குறிய அனைத்துச் சிறப்புக்களும் கண்ணியங்களும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. தான் செல்ல வேண்டும் என்ற தேவைக்கும் , கற்பதற்கும் , தொழில்காகவும் தவிர பெண்கள் வீணாக வீதியில் உலா வருவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

பெண்கள் வெளி செல்ல தேவைகள் அற்ற நிலையில் அவர்களை வீட்டில் இருக்கும் படி இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.

"இன்னும் (நபியுடைய மனைவியரே) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்.முன்னைய அறியாமை காலத்தில் (பெண்கள் மறைக்க வேண்டியதை மறைக்காது) வெளிப்படுத்தியதைப் போன்று வெளிப்படுத்தித் திரியாதீர்கள்." (33 :33)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள். பெண் (அவ்ரத் எனும்) பூர்த்தியாக மறைக்கப்பட வேண்டியவளாவாள். அவள் தனது வீட்டை விட்டு வெளியானால் ஷைத்தான் அவளைக் கூர்மையாக நோட்டமிட ஆரம்பிக்கின்றான்.

எனவே அவள் வீட்டின் உள்ளே இருக்கும் பொதுதான் அல்லாஹ்வின் ரஹ்மத்துக்கு நெருங்கிய நிலையில் இருக்கின்றால் (திர்மிதி : 1173 )

தனது கணவனோ தந்தையோ மகனோ வெளியில் சென்று தமது தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்கும் போது தானும் செல்ல வேண்டும் என அப் பெண் முயற்சிக்க கூடாது.

அவ்வாறு அவள் வெளிய செல்ல வேண்டும் என்றால் அபாயா அல்லது தமது அவ்ரத்தை முழுமையாக மறைக்க கூடிய ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும்.

தனது பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும். தனது பார்வையை தேவையற்ற விடயங்களில் செலுத்த கூடாது.

மேலும் நபியே நீர் விசுவாசிகளான பெண்களுக்கு கூறுவீராக தங்களுடைய பார்வைகளை தாழ்த்திக் கொள்ளவும் தாங்களுடைய மர்மஸ்தானங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும். ( 24 :31)

நாங்கள் அணியும் ஆடைகளுக்கு எப்பொழுதும் சில வரையறை இருக்க வேண்டும் இதனை இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.

இஸ்லாம் இவ்வாறான நிபந்தனைகளை இடுவது எம்மை பாதுகாக்கவே தவிர வதைக்க இல்லை என்பதை நாம் முதலில் எம் மனதில் ஆணித்தரமாக பதியச் செய்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு ஆடை விடயத்தில் இஸ்லாம் கூறும் நிபந்தனைகள் எவை

01 : நாம் அணியும் ஆடை முழு உடலையும் மறைக்க கூடியதாக இருக்க வேண்டும்

வெளியில் செல்லும் போது நாங்கள் அணியும் ஆடைகள் முழு உடலையையும் மறைக்க கூடியதாக இருக்க வேண்டும்.

தனது அழகு , கவர்ச்சி , அலங்காரம் போன்றவற்றை அந்நிய ஆண்களுக்கு முன் வெளிக்காட்டக் கூடாது .

02 : இயற்கை அழகிக்கு அப்பால் அலங்காரம் கூடாது

ஆடை அணியும் நோக்கம் பெண்களின் அழகையும் , அலங்காரத்தையும் மறைப்பதாகும். எம்மை பாதுகாப்பதற்காக அணியும் ஆடைய அலங்காரமாக இருந்தால் ஆடையின் நோக்கம் பிழைத்து விடும். இன்று இந்த இளம் சமூகத்தை சீரழிக்கும் நோக்கத்திலும் தமது வியாபார ,விளம்பர நோக்கத்தையும் அடிப்படையில் பல பெயராலும் , மிகை அலங்காரம் செய்து பல அபாயாக்கள் வளம் வருதை நாம் பார்கின்றோம்.

Type of Abaya

1. Frock Abaya

2. Butterfly Abaya

3. Plain Abaya

4. Denem Abaya

5. Colors Abaya

என்ற நாமங்களில் எங்களை காட்சி பொருளாக மாற்றி இருப்பதை நாம் பார்க்கலாம்.

எனவே நாங்கள் அணியும் அபாயாக்கள் கண்ணைக் கவரக் கூடியதாக இருக்க கூடாது.

03 : நாம் ஆணியும் ஆடை மெல்லியதாக இருக்கக்கூடாது

நாங்கள் அணியும் ஆடை மெல்லியதாக இருக்க கூடாது.மாற்றமாக உடலின் பாகங்கள் தெரியாத வண்ணம் இருக்க வேண்டும். மேலும் நாம் அணியும் உள்ளாடைகள் விளங்காத அளவு தடிப்பமான ஆடைகளை நாம் அணிய வேண்டும். இன்றைய இளம் சமூகம் சீரழிவுக்கு மிக முக்கிய காரணம் இந்த மெல்லிய ஆடைகள்தான் .

இன்று ஒவ்வெரு பாதை வழி சென்று பார்த்தாலும் நகரங்கள் , பாடசாலை , பல்கலைக்கழகங்கள் , கல்லூரி இதில் எங்கு சென்று பார்த்தாலும் இந்த அமைப்பு காணப்படுவதை நாம் பார்க்கலாம்.தமது உள்ளாடைகள் விளங்கி தமது மருமஸ்தாணங்கள் விளங்கும் அளவிற்கான மெல்லிய ஆடை கலாச்சாரம் காணப்படுவதைப் பார்க்கலாம்.

மேற்கத்தேயர்கள் ஆடை ஆணியாமல் நிர்வாணமாக இருக்கின்றார்கள் நாம் ஆடை அணிந்தும் நிர்வாணமாக உள்ளோம். இருவருக்கிடைய ஓர் வித்தியாசமும் இல்லை என்பதே யதார்த்த உண்மையாகும்.

எனவே எமது ஆடைகள் தடிப்பமானதாக அணியப்பட வேண்டும் நாம் அணியும் ஆடையின் மூலம் எமக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்.

04 : இறுக்கமற்ற விசாலமான ஆடையாக இருக்க வேண்டும்

நாம் அணியும் ஆடைகள் இறுக்கமற்றதாகவும் விசாலமானதாகவும் இருக்க வேண்டும்.ஆடையின் நோக்கம் பித்னாவை இல்லாமல் செய்வதாகும் . விசாலமானதாகவும் இறுக்கமற்றதாகவும் அணியும் போதுதான் அதன் நோக்கம் பூர்த்தியாகும்.

இறுக்கமாகவே , ஒடுக்கமானதாகவே , ஆடை தோலின் நிறத்தை மறைத்தாலும் கூட அது உடலுறுப்புக்களை பருமனை எடுத்து காட்டும் . ஆண்களின் கண்களில் உடலுறுப்புக்களை வர்ணித்து காட்டும்.அவ்வாறான ஆடைகளை அணிந்து வெளியில் செல்லும் போது பல குழப்பங்களுக்கு உள்ளாக வேண்டிய நிலைமை நமக்கு வேண்டும் .

மேலும் தமது ஆடைகளில் நறுமணங்கள் பூசிக் கொண்டு செல்லல் கூடாது. இவ்வாறு நறுமணம் பூசிக் கொண்டு வெளியில் செல்லும் பெண்களை நபி ஸல் அவர்கள் விபச்சாரி என்ற வார்த்தை பிரயோகத்தைக் கொண்டு அழைத்துள்ளார்கள். இவ்வாறான ஓர் வார்த்தையை ஒழுக்கமான எந்த பெண்களாலும் தாங்கி கொள்ள முடியாது.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் எந்தவொரு பெண் மணம் பூசிக் கொண்டு யாராவது ஆண்கள் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்துக்குப் பக்கத்தால் நடந்து சென்றால் அவள் ஒரு விபச்சாரி ஆவாள். ( நஸஈ : 5126 )

எனவே மேற்கூறிய விடயங்களை கருதிக் கொண்டு தமது ஆடை விடயங்களில் ஒவ்வொரு வரும் மிக கவனமாக இருக்க வேண்டியது கால , சூழலுக்கு மிக பெருத்தப்பாடாக இருக்கும் என நினைக்கின்றேன். இது எமது ஈருலக வெற்றியையும் சிறப்பானதாக ஆக்க வழிவமைக்கும்.

நபீஸ் நளீர்

(இர்பானி , இ.தெ .க .பல்கலைக்கழகம்)
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்
நவீன அபாயாக்களும் சீரழியும் இளம் சமூகமும் நவீன அபாயாக்களும் சீரழியும் இளம் சமூகமும் Reviewed by Vanni Express News on 12/30/2018 03:42:00 PM Rating: 5