அஸ்ரப்பின் நிலையிலிருந்து தலைவர் றிசாத்தை பாதுகாக்க வேண்டும்

-ஜெமீல் அகமட்

இலங்கையில் வாழும் சகல இன மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டும் என ஆங்கிலயோர் அன்று வழங்கிய சுதந்திரம் கடந்த கால ஆட்சியாளர்களால் இனவாத சுதந்திரமாக பார்க்கப்பட்ட போது தான் இலங்கையில் இனவாதம் உருவாகியது அதனால் இலங்கையில் வாழும் சகல இன மக்களும் சொல்லொண்னா தூயரத்தோடு நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் அவர்களில் மோளத்துக்கு ஒரு பக்க அடி தாளத்துக்கு இரு பக்க அடி என்பது போல் முஸ்லிம் சமுதாயத்தின் நிலையும் மோளத்தின் நிலை போன்று இருந்தது  ஏதுவும் அறியாத முஸ்லிம் சமுதாயம் பல பக்க இனவாத தாக்குதளுக்கு முகம் கொடுத்து நிம்மதியில்லாத வாழ்க்கை வாழ்ந்த போது தனது சமுதாயத்தின் விடிவுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் மர்ஹும் அஸ்ரப் அவர்கள் அரசியல் ஆயுதத்தால் வெற்றி பெற உருவாக்கிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும்  இனவாத செயலாக இனவாதிகள் கூக்குரலிட்டனர் அதனால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழித்து தேசிய ஐக்கிய முன்னனி என்ற கட்சியையும் ஆரம்பித்து அதற்கு சமாதான புறாவை சின்னமாக வைத்து சகல இன அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் நாட்டின் இனவாதத்தை ஒழித்து சகல மக்களும் நற்புடன் வாழ விரும்பிய அஸ்ரப் அவர்களின் அரசியல் இனவாதிகளுக்கு என்ன வங்குரோத்து அரசியல்வாதிகளுக்கும் பெரும் தலையீடியாக இருந்தது 

மர்ஹும் அஸ்ரப் அவர்கள் செய்த சொற்பகால அரசியல் நாட்டின் சமாதானத்தை நிலை நிறுத்தி முஸ்லிம் சமுதாயம் கௌரவத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாக்கியது  அவற்றை கண்ட இனவாதிகள் அஸ்ரப் அவர்களின் அரசியலை வீழ்த்த வேண்டும் அல்லது அவரை கொலை செய்ய வேண்டும் என மேற்கொண்ட  முயற்சிகள் கைகூடாத நிலையில் அஸ்ரப் அவர்கள் வானுர்தி விபத்தில்  மரணம் அடைந்தார் என்ற சோக செய்தியை கேட்ட  நாட்டு மக்கள் அழுதனர் ஆனால் இன்றும் அழுகின்ற மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியூதீன் அவர்களின் அரசியல் பாதை மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின்  அரசியல் பாதை என நிலைத்து மனஆறுதலாக வாழ்கிறனர்

அன்று மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் விட்டு சென்ற அரசியல் பாதையில் சென்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தனது இளம் வயதில் கனவு கண்ட றிசாத் பதியூதீன் எனும் இளம் சிங்கம் தலைவர் அஸ்ரப் அவர்களின் கட்சியான முஸ்லிம் காங்கிரஸில் இனைந்து அரசியலில் பயணித்தாலும் அந்த கட்சியின் தற்போதைய தலைவர் றவூப் ஹக்கிம் அவர்களால் முஸ்லிம் சமுதாயத்துக்கு எந்த நன்மையும் ஏற்படமாட்டாது என்பதை அன்று அடையாளம் கண்ட றிசாத் பதியூதீன் அவர்கள் ஹக்கிமின் தலைமையை புறக்கணித்து தனது சமுதாயத்துக்காக அஸ்ரப் அவர்கள்  என்ன செய்தாரோ அதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு மிகவும் துணிச்சலுடன்  ஆரம்பித்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியும் இனவாதிகளால் இனவாத செயலாக கூக்குரல் விட்டனர் அவ்வேளை தனது தலைவர் அஸ்ரப் அவர்களின் பாதையில் பயணிக்க தலைவரின் அதே சிந்தனையில் நாட்டு மக்களுக்காக தனது கட்சியின் பெயரையும் மாற்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்று பெயரை வைத்து தற்போது 15 வருடமாக அதன் தலைவராக இருந்து தொடர்ச்சியாக வன்னி மக்களின் அமோக விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றம் சென்று பல அமைச்சு பதவிகளை வகித்து சகல இன மக்களுக்கும்  கட்சி பேதம் ஜாதி பேதமின்றி சேவை செய்து இன்று நாட்டு மக்களின் ஆதரவை பெற்று நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் கட்சி தலைவராக றிசாத் பதியூதீன் அவர்கள் இருப்பது இனவாதிகளுக்கு அரசியல் வியாபாரிகளுக்கும் பெரும் பிரச்சினையாக இருக்கிறது 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியூதீன் அவர்கள் நாட்டில்  அடிக்கடி ஏற்படும் இனவாதம் ஒழிக்கப்பட்டு சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் அத்தோடு நாட்டில் ஜனநாயகம் மதிக்கப்பட்டு ஊழல் ஒழிக்கப்பட  வேண்டும் என்ற நோக்கத்துடன் பதவி பணத்துக்கு அப்பால் மக்கள் நலனுக்காக அரசியல் செய்யும் போது அவரை கொலை செய்ய சதி திட்டம் போட்டதாக நாமல்குமார என்னும் நபர் வெளிப்படையாக வாக்கு மூலம் வழங்கியுள்ளார் அது சம்மந்தமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குற்றப்புலனாய்வு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு சம்மந்தமாக இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் குற்றப்புலனாய்வு பொலிசில் மூன்று மணி நேரம் வாக்கு மூலம் வழங்கி தனது மனவேதனையும் தெரிவித்துள்ளார் 

அன்று நாட்டில் இருக்கும் சிறுபான்மை அரசியல்வாதிகளில் மக்களுக்காக துணிந்து அரசியல் செய்த 
 ஒரு அரசியல்வாதி என்றால் அது #அஸ்ரப்  என்றுதான் மக்கள் சொன்னார்கள் அதுபோல் இன்று இருக்கும் சிறுபான்மை அரசியல்வாதிகளில் அஸ்ரப் போன்று அரசியல் செய்பவர் யார் என்றால் அது சின்ன அஸ்ரப் #றிசாத் என்றுதான் மக்கள் சொல்கின்றனர் அதனால்  றிசாத் பதியூதீன் உயிருடன் இருக்ககூடாது என்று இனவாதிகள் விரும்பினாலும் அல்லாஹ் விரும்பமாட்டான் அத்தோடு றிசாத் பதியூதீனின் நலனுக்காகவும் அவரின் நீண்ட ஆயுளுக்காகவும் பல்லாயீரக்கணக்கான மக்கள் துஆ செய்கின்றனர் அவர்களின் துஆ பாதுகாக்கும் என்பதால் எந்த குமாரனின் திட்டமும் வெற்றியளிக்காது  என்ற சந்தோஷத்தில் மக்கள் இருக்கின்றனர் 

ஆனால் ஒன்று மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் மரணத்தின் காரணம் இதுவரை என்னவென்று தெரியாத மர்மமான சூழ்நிலையில் மக்கள் சந்தேகத்தில் இருக்கும் போது அப்படி ஒரு மரணம் இனிமேல் நாட்டில் ஏற்பாடாமல் இருக்க அரசியல்வாதிகளின் பாதுகாப்பை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும் 

இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியூத்தீன் என்றால் சிறுபிள்ளையும் தலைவர் என்று சிரித்து பேசும் நிலையில் இனவாதிகள் அவரை அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்து  கொலை செய்ய திட்டம் போட்டுள்ளனர் என்ற செய்தி அறிந்த ஜனாதிபதி தலைவர் றிசாத் அவர்களின் பாதுகாப்பை அதிகரிக்காமல் அவரின் பாதுகாப்பை முற்றாக நீக்கிய விடயம் என்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது அதுமட்டுமல்ல தலைவர் றிசாத் அவர்களின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் போது  அதற்குரிய முழுப்பொறுப்பையும் ஜனாதிபதி அவர்களே ஏற்கவேண்டிய நிலை ஏற்படும் 

எனவே இன்றைய அரசியல் சூழ்நிலையில் இனவாதிகள் வங்குரோத்து அரசியல்வாதிகளின் கழுகு பார்வையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் இருப்பதால் நாமல்குமாரயின் வாக்கு முலத்தின் பிரகாரம் அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை விட அதிவுயர் பாதுகாப்பை ஜனாதிபதி வழங்க வேண்டும்.
அஸ்ரப்பின் நிலையிலிருந்து தலைவர் றிசாத்தை பாதுகாக்க வேண்டும் அஸ்ரப்பின் நிலையிலிருந்து தலைவர் றிசாத்தை பாதுகாக்க வேண்டும் Reviewed by Vanni Express News on 12/07/2018 12:53:00 AM Rating: 5