மாவனல்லை சிலை உடைப்பு சம்பவம் - கபீர் ஹசீமை தொடர்புகொண்ட ஜனாதிபதி
கண்டி மாவனெல்லை பகுதியில் புத்த சிலைகள் உடைக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால விசாரித்துள்ளார்.
தாய்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி அங்கிருந்து அவசர தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி, அமைச்சர் கபீர் ஹசீம் உடன் கலந்துரையாடி உள்ளார்.
மாவனெல்ல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்பில் சரியான நடவடிக்கை எடுக்கமாறு அவர் கோரியுள்ளார்.
பதற்ற நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் பதற்ற நிலைமையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை சிலை உடைப்பு விவகாரம் பிரச்சனைகளை ஏற்படுத்தும் அளவு செல்லும் என்பதனால் அமைதியாக இருக்குமாறும் தவறு செய்தவர்களுக்கு முழுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் அமைச்சர் அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Reviewed by Vanni Express News
on
12/27/2018 03:58:00 PM
Rating: