நான் கட்சி பேதம் இன்றி மக்களுக்காக குரல் கொடுப்பேன் - திலகரட்ன டில்ஷான்

பொதுமக்களின் அதிகாரத்திற்கு இடமளிக்க வேண்டும் என்பதுடன் நாட்டை ஸ்திரமான நிலைமைக்கு கொண்டு வர பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என பிரபல கிரிக்கெட் வீரர் திலகரட்ன டில்ஷான்  தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டுக்கு சேவை செய்யும் நபர்கள் என்ற வகையில் விளையாட்டு வீரர் என்ற முறையில் மக்களுக்காக பேச வேண்டும். தேர்தல் ஒன்றுக்குச் செல்ல வேண்டும்.

ஸ்திரமான நாட்டை உருவாக்க தேர்தலுக்கு செல்ல வேண்டும். மக்களிடம் சென்று மக்களின் விருப்பத்தை கேட்டறிந்து, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

நான் கட்சி பேதம் இன்றி மக்களுக்காக குரல் கொடுப்பேன். மக்களின் அதிகாரத்திற்கு இடமளிக்க வேண்டும். மக்களின் விருப்பத்தை அறிய இடமளிப்போம். அத்துடன் சரியான நபர்களை தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்புமாறு மக்களிடம் கோருகிறேன் எனவும் திலகரட்ன டில்ஷான் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரரான திலகரட்ன டில்ஷான், அண்மையில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் கட்சி பேதம் இன்றி மக்களுக்காக குரல் கொடுப்பேன் - திலகரட்ன டில்ஷான் நான் கட்சி பேதம் இன்றி மக்களுக்காக குரல் கொடுப்பேன் - திலகரட்ன டில்ஷான் Reviewed by Vanni Express News on 12/07/2018 12:12:00 AM Rating: 5