பொதுத் தேர்தலை நடத்துமாறு சத்தியகிரக போராட்டம் ஆரம்பம்

பொதுத் தேர்தலை நடத்துமாறு ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களும் சத்தியகிரக போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். 

நேற்று (03) ஹம்பாந்தோட்டை களஞ்சியசாலை சந்தியில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சத்தியகிரக போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் நாட்டை பாதுகாக்கவும், தேசபற்றுள்ள தலைவர் ஒருவரை வேண்டியும் கதிர்காமம் தேவாலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்றதுடன் தேங்காய் உடைத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

மீண்டும் பொதுத் தேர்தலை வழங்கும் வரையில் இந்த சத்தியகிரக போராட்டம் தொடரும் என போராட்டத்தை ஆரம்பித்து வைத்த பீரிஸ் என்பவர் தெரிவித்துள்ளார். 

நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலமைக்கு சரியான தீர்மானமாகிய பொதுத் தேர்தலை வழங்கும் வரையில் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஹம்பாந்தோட்டை மக்கள் தீர்மானித்துள்ளதாக ஹம்பாந்தோட்டை மாநகர சபை உறுப்பினர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலை நடத்துமாறு சத்தியகிரக போராட்டம் ஆரம்பம் பொதுத் தேர்தலை நடத்துமாறு சத்தியகிரக போராட்டம் ஆரம்பம் Reviewed by Vanni Express News on 12/04/2018 03:32:00 PM Rating: 5