இலங்கை ஐக்கிய நலன்புரி ஒன்றியத்தின் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு

-எமது செய்தியாளர் - ஏ.ஜீ.எம்.வஸீம் மீஸானி 

இலங்கை ஐக்கிய நலன்புரி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 2018/12/25 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 09:00 மணிக்கு  ஒன்றியத்தின் பிரதித்தலைவர் ஜே.ஸலாம்தீன் அவர்களின் தலைமையில் பாடசாலைக் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அ/வெலிகொள்ளாவ முஸ்லிம் வித்தியாலயத்தின் கேடபோர் கூடத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. அல் ஹிக்மா அமைப்பின் பகுதிநேர அல் குர்ஆன் மனனப் பிரிவு மாணவன் எம்.முஆத் கிராத் ஓதி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து ஒன்றியத்தின் பிரதித்தலைவர் ஜே.ஸலாம்தீன் அவர்களினால் வரவேற்புரையும்,அறிமுக உரையும் நிகழ்த்தப்பட்டது.தொடர்ந்து சமூக நலன்புரி  அமைப்புக்களுடைய முக்கியத்துவமும்  பின்தங்கிய கிராமங்களுக்கான அரசியல்வாதிகளின் பஙகளிப்புக்களும் எனும் தொனிப்பொருளில் அமைப்பினுடைய பொருளாளர் அஷ் ஷெய்க் எம்.எம்.றிஸ்வான் மீஸானி  ஊரை நிகழ்த்தினார்.

  பின்னர் ஒன்றியத்தின் தலைவர் அஷ் ஷெய்க் ஜே.பாயிஸ் ஹாமி அவர்களினால் ஒன்றியத்தின் குறிக்கோள்,சேவைகள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் நினைவுபடுத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து அநுராதபுர மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஷாக் றஹ்மான், முன்னால் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் பீ.ஷஹீது ஆசிரியர், கஹடகஸ்திகிலிய பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ஏ.எம்.நஜீம் ஆசிரியர் மற்றும் முன்னால் கஹடகஸ்திகிலிய பிரதேச சபை உறுப்பினர் எம்.சீ.ஸாதிக்,ISRC அமைப்பின் தலைவர் எம்.எச்.எம்.மிஹ்லார் ஆகியோர்களுடைய விஷேட உரைகளும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும். நிகழ்வுக்கு வருகைதந்திருந்த அதிதிகளின் பொற்கரங்களினால் 2019 ஆம் ஆண்டிற்கான முதலாம் வருட புதுமுக மாணவர்கள், கா.பொ.த சாதாரண தர மாணவர்கள் மற்றும் தாய் தந்தையை இழந்த மாணவர்களுக்குமான பாடசாலைக் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.அத்தோடு பள்ளி வாயில்கள்,மத்ரஸாக்கள் போன்றவற்றின் அலுவலக உபயோகத்திற்குக் தேவையான பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், சில ஊக்குவிப்புப் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இறுதியாக  இலங்கை ஐக்கிய நலன்புரி ஒன்றியத்தின் பொதுச்செயளாலர் அஷ்ஷெய்க் ஏ.ஜீ.எம்.வஸீம் மீஸானி அவர்களுடைய  நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவடைந்தன. குறித்த நிகழ்வை முழுமையாக எம்.நிஸாம் ஆசிரியர் அவர்கள் நெறியாள்கை செய்தமை குறிப்பிடத்தக்கது.

✍ ஏ.ஜீ.எம்.வஸீம் மீஸானி 
 பொதுச் செயலாளர், 
 இலங்கை ஐக்கிய நலன்புரி ஒன்றியம்.
இலங்கை ஐக்கிய நலன்புரி ஒன்றியத்தின் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இலங்கை ஐக்கிய நலன்புரி ஒன்றியத்தின் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு Reviewed by Vanni Express News on 12/26/2018 04:17:00 PM Rating: 5