சுகாதார இராஜாங்க அமைச்சர் பதவியேற்பு - Photos

-ஊடகப்பிரிவு

சுகாதார ,போசணை மற்றும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் பைசல் காசீம் இன்று  காலை அவரது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கொழும்பு .10,பத்தேகம விமலவன்ச தேரோ மாவத்தையில் அமைந்துள்ள சுகாதார அமைச்சில் சமய வழிபாடுகளுடன் உத்தியோகபூர்வமாக கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன,சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்,இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ,முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி,சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா  மற்றும் பொதுமக்கள் என அதிகமானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சுகாதார இராஜாங்க அமைச்சர் பதவியேற்பு - Photos சுகாதார இராஜாங்க அமைச்சர் பதவியேற்பு - Photos Reviewed by Vanni Express News on 12/26/2018 03:45:00 PM Rating: 5