சிறுவர் இல்லத்தில் தீ விபத்து - அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 21 சிறுவர்கள்

அநுராதபுரம், ஜயந்தி மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தீயினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத போதிலும் கட்டிடத்தின் மேற்பகுதி பாரிய சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நேற்று இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

சிறுவர் இல்லக் கட்டிடத்தின் மேற்பகுதியில் திருத்தப் பணிகள் மேற்கொண்டு வந்த நிலையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

அநுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் பலத்த போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தததாக தெரிவிக்கப்படுகிறது. 

தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 21 சிறுவர்கள் அங்கு இருந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
சிறுவர் இல்லத்தில் தீ விபத்து - அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 21 சிறுவர்கள் சிறுவர் இல்லத்தில் தீ விபத்து - அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 21 சிறுவர்கள் Reviewed by Vanni Express News on 12/20/2018 04:07:00 PM Rating: 5