இரணைமடு வான் பகுதிக்குள் அதிகளவு மீன்கள் - பலர் மகிழ்ச்சியில்

இரணைமடு குளத்தின் வான் பகுதிக்குள் அதிகளவு மீன்கள் பிடிபடுவதனால் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

இதனால் தற்போது பெருமளவானவர்கள் வான் பகுதிக்குள் மீன் பிடியில் இறங்கியுள்ளனர். 

நூற்றுக்கணக்கான கிலோ மீன்கள் பிடிப்படுவதனால் வியாபாரிகளும் இரணைமடுவில் குவிந்துள்ளனர். 

நேற்று (25) மாத்திரம் பல இலட்சங்களுக்கு மீன் விற்பனை இடம்பெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

அத்தோடு தொடர்ந்தும் வான் பகுதிக்குள் பலர் மீன்பிடியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அவற்றை கொள்வனவு செய்வதற்கு மக்களும் வியாபாரிகள் குவிந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 
இரணைமடு வான் பகுதிக்குள் அதிகளவு மீன்கள் - பலர் மகிழ்ச்சியில் இரணைமடு வான் பகுதிக்குள் அதிகளவு மீன்கள் - பலர் மகிழ்ச்சியில் Reviewed by Vanni Express News on 12/26/2018 04:37:00 PM Rating: 5