உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில்

உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமானமான என்டநொவ் 124 ரக சரக்கு விமானம் ஒன்று அவசரமாக மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. 

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் மத்தள விமான நிலையத் தரையிறக்கப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார். 

தாய்லாந்தில் இருந்து உகண்டா நோக்கி பயணித்த இந்த விமானம் நேற்று அதிகாலை 5.26 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் கோளாறுகள் சரி செய்யப்பட்டு மத்தள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.26 மணியளவில் மீண்டும் உகண்டா நோக்கி விமானம் பயணித்துள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் Reviewed by Vanni Express News on 12/14/2018 05:31:00 PM Rating: 5