பண்டாரநாயக்க விமான நிலையத்தில் திடீர் என தரையிறக்கப்பட்ட விமானம் - பதற்றத்தில் பயணிகள்

உலகிலே பெரிய { A -380 Airbus } எனும் விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் திடீர் என தரையிறக்கப்பட்டது.

டுபாய் நகரில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த குறித்த விமானத்தில், திடீர் என ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 05.30 மணிக்கு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதுடன், விமானத்தில் 490 பயணிகள் உட்பட 22 ஊழியர்கள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் சுகயீனமுற்ற பயணி கட்டுநாயக்க விமான நிலைய மருத்துவ மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு மருததுவமனையிற்கு கொண்டு செல்லப்பட்டார்.

குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிலையில், 80 லட்சம் ரூபாவிற்கு எரிபொருள் நிரப்பபட்டதாக விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் காலை 7.40 க்கு விமானம் அவுஸ்திரேலியா - சிட்னி விமான நிலையம் நோக்கி பயணித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பண்டாரநாயக்க விமான நிலையத்தில் திடீர் என தரையிறக்கப்பட்ட விமானம் - பதற்றத்தில் பயணிகள் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் திடீர் என தரையிறக்கப்பட்ட விமானம் - பதற்றத்தில் பயணிகள் Reviewed by Vanni Express News on 12/22/2018 04:04:00 PM Rating: 5