அனைத்திற்கும் மைத்திரபால சிறிசேனவே பொறுப்புக்கூற வேண்டும் - ஹரீன் பெர்ணான்டோ

இனிமேல் ஐக்கிய தேசிய கட்சியினால் பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பதில்லை எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதியாக நியமிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

நேற்று (02) மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

புத்தர் வாழ்ந்த மண்ணான மஹிங்கனையை தெரிவு செய்ததாகவும் பொலன்னறுவையில் இருந்து வந்த ஒருவரினால் அனைத்தும் சிக்கலடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அலைக்கு பயந்தால் எப்போதும் கரைக்கு வருவதில்லை எனவும், நடைபெற்ற அனைத்திற்கும் மைத்திரபால சிறிசேனவே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
அனைத்திற்கும் மைத்திரபால சிறிசேனவே பொறுப்புக்கூற வேண்டும் - ஹரீன் பெர்ணான்டோ அனைத்திற்கும் மைத்திரபால சிறிசேனவே பொறுப்புக்கூற வேண்டும் - ஹரீன் பெர்ணான்டோ Reviewed by Vanni Express News on 12/03/2018 06:34:00 PM Rating: 5