அரசியல் நெருக்கடி நிறைவு - இந்தியா திருப்தி - தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்

இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட்டுள்ளமையை இந்தியா ஏற்றுக்கொள்வதாகவும் தொடர்ந்து வரும் நாள்களில் இந்தியா- இலங்கைக்கு இடையிலான உறவை வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் அயல் நாடான இலங்கையின் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும் என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஸ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றப் பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அரசியல் நெருக்கடி நிறைவு - இந்தியா திருப்தி - தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் அரசியல் நெருக்கடி நிறைவு - இந்தியா திருப்தி - தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் Reviewed by Vanni Express News on 12/17/2018 03:57:00 PM Rating: 5