நெருக்கடி தந்தால் பதவியை இராஜினாமா செய்து விட்டு பொலன்னறுவையில் விவசாயம் செய்வேன்

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்களுடனான சந்திப்பின் போது, “தன்னை அதிகம் நெருக்கடிக்கு உள்ளாக்கினால், நாட்டுக்கு உரையாற்றிவிட்டு, தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டு, தனது பொலன்னறுவை விவசாய பண்ணைக்கு விவசாயம் செய்ய சென்று விடுவேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உணர்ச்சி வசப்பட்டு கூறியதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், இந்த கருத்தை ஜனாதிபதி கூறியபோது அந்த கலந்துரையாடலில் என்னுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச, ராஜித சேனாரத்ன, லக்ஸ்மன் கிரியெல்ல, ரிஷாத் பதியுதீன், ரவுப் ஹக்கீம், பழனி திகாம்பரம், கபீர் ஹாசிம், ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், மலிக் சமரவிக்ரம, கயந்த கருணாதிலக, அர்ஜுன ரணதுங்க ஆகியோரும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
நெருக்கடி தந்தால் பதவியை இராஜினாமா செய்து விட்டு பொலன்னறுவையில் விவசாயம் செய்வேன் நெருக்கடி தந்தால் பதவியை இராஜினாமா செய்து விட்டு பொலன்னறுவையில் விவசாயம் செய்வேன் Reviewed by Vanni Express News on 12/05/2018 05:58:00 PM Rating: 5