மீண்டும் யுத்தமோ பயங்கரவாதமோ வேண்டாம் - முல்லைத்தீவில் சுவரொட்டிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ´மீண்டும் யுத்தமோ பயங்கரவாதமோ வேண்டாம்´ என எழுதப்பட்ட பல சுவரொட்டிகளை காணக்கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

முல்லைத்தீவு மற்றும் முல்லியவௌி பகுதிகளில் இவ்வாறான சுவரொட்டிகளை காணக்கூடியதாக உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

அண்மையில் மட்டக்களப்பு, வவுணத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை சிவில் அமைப்புக்களும் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.1543975875-mullaitevu-21543975875-mullaitevu-2%2B-%2BCopy
மீண்டும் யுத்தமோ பயங்கரவாதமோ வேண்டாம் - முல்லைத்தீவில் சுவரொட்டிகள் மீண்டும் யுத்தமோ பயங்கரவாதமோ வேண்டாம் - முல்லைத்தீவில் சுவரொட்டிகள் Reviewed by Vanni Express News on 12/05/2018 04:59:00 PM Rating: 5