சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரி மாணவிகள் அனைவரும் சித்தி

-அஸ்லம் எஸ்.மௌலானா

இம்முறை க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றிய சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரி மாணவிகள் 07 பேரும் அனைத்து பாடங்களிலும் திறமையாக சித்தியடைந்து, பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

கல்லூரி ஆரம்பிக்ப்பட்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய முன்னைய இரு தொகுதி மாணவிகள் அனைவரும் இவ்வாறு சித்தியடைந்து பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாகியிருந்தனர் எனவும் தொடர்ச்சியாக எமது மாணவிகள் சிறந்த பெறுபேறுகள் பெற்று வருகின்றமையானது கல்லூரி நிர்வாகத்தினருக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன் ஏனைய மாணவிகளுக்கும் பெற்றோருக்கும் இக்கல்லூரி மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் எனவும் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.

இக்கல்லூரியில் அல்ஆலிம் கற்கை நெறி போதிக்கப்படுவதுடன் ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கும் மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர். இங்கு பயிலும் மாணவிகள் மூன்றாம் வருடத்தில் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதுடன் நான்காம் வருடத்தில் அரசாங்க அல்ஆலிம் பரீட்சைக்கு தோற்றி மௌலவியாக்களாக வெளியேறுகின்றனர். இதுவரை இக்கல்லூரியில் இருந்து 09 மாணவிகள் மௌலவியா பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் தனியார் கட்டிடம் ஒன்றில் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் இயங்கி வந்த இக்கல்லூரி, பொலிவேரியன் நகரில் விடுதி உட்பட அனைத்து வசதிகளுடனும் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடக் தொகுதியில் தற்போது இயங்கி வருகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரி மாணவிகள் அனைவரும் சித்தி சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரி மாணவிகள் அனைவரும் சித்தி Reviewed by Vanni Express News on 12/31/2018 03:30:00 PM Rating: 5