இன மத பேதமின்றி சுமார் 300 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-S.சஜீத்

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி காத்தான்குடி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தேச விவகாரத்திற்கு பொறுப்பான துணை நிருவனமான ஒருங்கிணைப்பு நல்லிணக்கம் மற்றும் விழுமியங்களுக்கான மத்திய நிலையம் (CARES) யின் அனுசரணையோடும் சுமார் 300 வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இரு கட்டமாக இடம்பெற்றது

இதன் முதற்கட்ட விநியோகமாக கடந்த (23) ஞாயிற்றுக்கிழமை கல்முனை  அம்பாறை சிங்கள மகாவித்தியாலயத்தை சேர்ந்த 40 வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டனைதை தொடர்ந்து இராண்டாம் கட்ட விநியோகமாக (25) நேற்றையதினம் காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது 210 காத்தான்குடி   மாணவர்களும் அயல் கிராமமான செல்வாநகர் கிராமத்தில் இருந்து 50 தமிழ் மாணவர்களும்  கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொண்டனர்.

காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது பிரதம அதிதிகளாக காத்தான்குடி நகர சபை தவிசாளர்; எஸ்.எச். அஸ்பர் அவர்கள் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு. உதயஸ்ரீதர் (SLAS) அவர்களும் கௌரவ அதிதிகளாக ஆரையம்பதி பிரதேச சபை செயலாளர் எஸ். சத்தியானந்தி (SLAS) அவர்களும் பிரதேச கல்விப் பணிப்பாளர் MACM.பதுர்டீன் உட்பட இன்னும் பல கல்வி அதிகாரிகள் விருந்தினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர். இதன்போது சிறப்புப் பேச்சாளராக காத்தான்குடி அல்-மனார் இஸ்லாமிய கல்லூரின் அதிபர் அஷ்ஷெய்க் அக்ரம் (நளீமி) அவர்கள் மாணவர்களின் விழுமியங்கள் தொடர்பாக உரை நிகழ்த்திமை குறிப்பிடத்தக்கது.
இன மத பேதமின்றி சுமார் 300 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு இன மத பேதமின்றி சுமார் 300 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு Reviewed by Vanni Express News on 12/26/2018 04:26:00 PM Rating: 5