அனாதரவற்ற இரு சிறார்களின் வாழ்க்கைக்கு ஒளியூட்ட முழுமையாக வாசியுங்கள்

-வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் 

இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள இரு முஸ்லிம் கிராமங்களில் வாழும் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களே இவர்கள் 

இந்த சிறுவர்களில் ஒருவரது தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் தாய் பிறவி முதல் வாய் பேச முடியாத நிலையில் பாரிசவாதம் நோயினாலும் பாதிக்கப்பட்டு எழுந்து நடக்க முடியாத நிலையில் வீட்டுடன் முடங்கி நோயுடன் அடுத்த நாளுக்கான வாழ்க்கை கேள்விக்குறியான நிலையில்  வாழ்ந்து வருகிறார்.

அத்துடன் இந்த சிறுவனுக்கு இரண்டு பெண் சகோதரிகளும் இருக்கின்றனர். 

தனது சிறு வயது முதல் பல்வேறான சொல்லனாத் துன்பங்களை அனுபவித்து வரும் சிறுவனின் கதை மிக நீண்ட துயரத்தின் தொடர்கதை.........

மற்றுமொரு சிறுவனின் நிலையும் அவ்வாறுதான் தாய்  அவர்களை விட்டு பிரிந்து சென்ற நிலையில் வயது முதிர்ந்த சிறுநீரக நோயாளியான தந்தையின் கடைசி மகன் 

மிகுந்த வறுமையில் வாழும் இவர்களுக்கு அன்றாட உணவு வழங்கக்கூட யாருமில்லாத நிலை கானப்படுகிறது.

சிறுநீரக நோயாளிகளுக்கு மாதாந்தம் அரசினால் கொடுக்கப்படும் 5000 ரூபாய் பணத்துடன் தமது வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர்.

இந்த சிறுனுக்கு சிலர்  உனவைக்கொடுத்து மந்தை மேய்ப்புக்கு பயன்படுத்துகின்றனர். சில வேளைகளில் பசியின் கொடுமை காரனமாக களவு எடுத்து உண்ணும் நிலைக்கும் இவன் தள்ளப்பட்டுள்ளான்.

பராமரிக்க ஆட்கள் இன்றி, உணவு இன்றி, கல்வி இன்றி அனாதரவாக சுற்றி திரிந்த இந்த இரண்டு சிறார்களையும் அடையாளம் கன்டு அவர்களது நலன் கருதி  இருவரையும் அரபுக்கலாசாலையொன்றில் சேர்ப்பதற்கு அழைத்து சென்றேன் குறித்த இரு சிரார்களும் நேர்முகத் தேர்வில் சித்தி பெறாவிட்டாலும் அந்த நிர்வாகம் இவர்களின் நிலை அறிந்து அவர்களை பராமரிக்க முடிவு செய்துள்ளனர்.

இப்பொழுது குறித்த சிறார்களை எதிர்வரும்  (08.01.2019)   அன்று அந்த கலாசாலையில் சேர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்பான நண்பர்களே!

இந்த சிறார்களை பராமரிக்க  ஒருவருக்கு மாதம் ஒன்றிற்கு 5000 ரூபா கட்டணமாக அறவிடப்படுவதுடன் சேர்க்கும்போது கடிதத்தில் கொண்டுவரப்படவேண்டிய ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் தொடர்பான பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

நம்மால் அனைவருக்கும் உதவ முடியாது ஆனாலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சிறார்களின் வாழ்க்கைக்கு ஒளியூட்ட முடியும்.

உங்களால் முடிந்தால் குறித்த சிறார்களின் ஒரு மாதத்துகான கட்டனத்தை வழங்கி உதவுங்கள் அல்லது கீழே குறிப்பிடும் பொருட்களில் ஏதாவது பொருளை வழங்கி உதவுங்கள் 

உதவிகள் வேண்டி வரும் செய்திகளில் நம்பகத்தன்மை இல்லாது இருப்பதை நான் அறிவேன் ஆகவே என்னோடு தொடர்கொள்ளும் நண்பர்களுக்கு அந்த பராமரிப்பு நிலையத்தின் தகவல்களையும் அவர்களது கலாசாலை வங்கி கணக்கிலத்தையும் வழங்குகிறேன்  தகவல்களை உறுதி செய்து உங்களது உதவிகளை வழங்குங்கள்.

மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள் 
நான் முஹம்மது சர்ஜான் 0774828281

உங்களால் உதவ முடியாவிட்டால் உதவக்கூடிய உங்கள் நண்பர்களுடன் இந்த தகவலை பகிர்ந்தாவது உதவுங்கள்.

இருவருக்கும் தேவைப்படும் பொருட்களின் விபரம்

120 பக்க கொப்பிகள் 20
பெரிய அல்குர்ஆன் பிரதிகள் 2
பூட்டுடன் பொருட்களை பாதுகாக்கக்கூடிய பெட்டி அல்லது பேக் 2
6×3 அளவிலான மெத்தை 2 
லைட் நீலம் மெத்தை உரைகள் 2
தலையணை 2 தலையனை உரை லைட் நீலம்
2 பெட் சீட் தேவையான அளவு
தேனீர் குவளை 2
நீர் அருந்தும் குவளை 2
2கண்ணாடி 
2 சீப்பு
சவர்க்காப்பெட்டி
தேவையான சர்வர்க்காரம், பற்பசை, பல் துலக்கி, சலவைத்தூள்
இரப்பர் பாதனி 2 
விளையாட்டு காலனி 2 (மைதானத்துக்கு மட்டும்)
மட்டை தொப்பி 6 வெள்ளை 4 கட்டாயம்
நீளமான வெள்ளை ஜுப்பா (தோப்பு)  6
நீள காற்சட்டை 4 (பைஜம்) வெள்ளை நிறம்
நீளமான கருப்பு நிற களிசான் 2
தேவையான சரங்கள்
வெள்ளை நிற கை பெனியன் 6
நீல நிற பொட்டொம் 4
லைட் நீலம் டீ சேட் 4
கை நீளமான லைட் நீல நிற சேட் 
துவாய்2
சுவிட்டர்2
சிறிய. குடை 2
நுளம்பு வலை 2
உடுப்பு கழுவும் வாலி 2 
பக்கட் 2 

இவர்களை என்னால் அடையாளப்படுத்த முடிந்தது போல உங்களால் கரம் கொடுக்க முடியும்

உங்களுக்கு இறைவன் கொடுத்ததில் இருந்து கொடுத்து இந்த சிறார்களின் வாழ்க்கைக்கு ஒளியூட்டுங்கள்.

நன்றி.
அனாதரவற்ற இரு சிறார்களின் வாழ்க்கைக்கு ஒளியூட்ட முழுமையாக வாசியுங்கள் அனாதரவற்ற இரு சிறார்களின் வாழ்க்கைக்கு ஒளியூட்ட முழுமையாக வாசியுங்கள் Reviewed by Vanni Express News on 12/25/2018 11:10:00 PM Rating: 5