பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் - கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்தும் விசாரணை
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருவரும் தடுத்து வைக்கப்படு தொடர்ந்து விசாரணை செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் விசாரணை செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவு, வலையிறவு பாலம் அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடந்த மாதம் 29ம் திகதி நள்ளிரவு கடமையில் இருந்த பொலிஸார் இருவர் இனந் தெரியாதோரால் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகியும் கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
அதன்படி சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் விசாரணை செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவு, வலையிறவு பாலம் அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடந்த மாதம் 29ம் திகதி நள்ளிரவு கடமையில் இருந்த பொலிஸார் இருவர் இனந் தெரியாதோரால் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகியும் கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
அதன்படி சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் - கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்தும் விசாரணை
Reviewed by Vanni Express News
on
12/08/2018 10:44:00 PM
Rating: