புதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப் போவதில்லை


புதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, தேவை ஏற்படின் தானும் அமைச்சு பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று (18) காலை ஐக்கிய தேசிய முன்னணியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பெரும்பாலும் இன்று அல்லது நாளை நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அரசியலமைப்பின் படி தேசிய அரசாங்கம் இல்லாத போது அமைச்சரவை 30 பேராக வரையறுக்கப்பட வேண்டும். 

புதிய அமைச்சரவையில் சிலருக்கு ஏற்கனவே தாங்கள் பதவி வகித்த அமைச்சுக்களையே வழங்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப் போவதில்லை புதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப் போவதில்லை Reviewed by Vanni Express News on 12/18/2018 04:01:00 PM Rating: 5