மீண்டும் திடீர் தீர்மானம் எடுத்த ஜனாதிபதி

ஆளுங்கட்சியுடன் இணைந்துக் கொண்ட, ஸ்ரீ லங்கா சுத்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமைச்சு பதவிகளை வழங்காதிருக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்திற்கு ஸ்ரீ லங்கா சுத்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அனுமதி கிடைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுத்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று, கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

2 மணித்தியாளங்கள் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடு முழுவதுதிலும் உள்ள கட்சியின் அமைப்பாளர்கள், தொழில் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டதாக, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மண் பியதாச தெரிவித்துள்ளார்.<

இதன்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால புனரமைப்பு பணிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஆளும் கட்சியுடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான அவதூறான கருத்துக்களை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அடுத்த மத்திய செயற்குழு கூட்டத்தின் போது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் திடீர் தீர்மானம் எடுத்த ஜனாதிபதி மீண்டும் திடீர் தீர்மானம் எடுத்த ஜனாதிபதி Reviewed by Vanni Express News on 12/19/2018 05:40:00 PM Rating: 5