எனக்கும் ரணிலுக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை - ஜனாதிபதி

நீதிமன்றம் தரும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனடிப்படையில் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று (09) காலை பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

சிலர் தற்போதைய அரசியல் நெருக்கடியை கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினையாக பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

தனக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் தற்போது நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மைக்கும், நெருக்கடிகளுக்கும் வெளிநாடுகளின் தாக்கமே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் ஜனநாயக நாட்டில் ஜனாதிபதியாக நாட்டின் அனைத்து பலமும் தன்னிடம் உள்ளதை எண்ணி தான் கவலையடைதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
எனக்கும் ரணிலுக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை - ஜனாதிபதி எனக்கும் ரணிலுக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை - ஜனாதிபதி Reviewed by Vanni Express News on 12/09/2018 05:43:00 PM Rating: 5