தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டமைப்பு - பிரதமர் ரணில்

தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

காலி முகத்திடலில் இடம்பெற்ற நீதிக்கான போராட்டப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழிப்பதற்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை வழங்குமாறும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். 

அத்துடன் எந்த காலத்தில் தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் அனைத்து கட்சிகளிடமும் கருத்துக்களை பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் கண்டறிந்து அவற்றை எதிர்காலத்தில் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டமைப்பு - பிரதமர் ரணில் தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டமைப்பு - பிரதமர் ரணில் Reviewed by Vanni Express News on 12/17/2018 10:49:00 PM Rating: 5