பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தி

நத்தார் எல்லையில்லா மகிழ்ச்சியின் காலம். இது கடந்த காலத்தை நினைவு கூர்வதும் எதிர்கால நம்பிக்கையினதும் நேரமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

கிறிஸ்துவின் வாழ்க்கை சிதைந்த இவ்வுலகிற்கு நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வந்தது. இந்த பொன்னான காலம் பிரிவினை வாதங்களில் இருந்து நம்மை விடுவித்து சாதி, மதம் மற்றும் மொழிகளுக்கு அப்பால் சென்று சகல இலங்கையர்கள் மத்தியிலும் சகோதரத்துவத்தையும் சக உணர்வையும் தோற்றுவிக்கும் எனவும் பிரதமர் விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

உங்கள் அனைவர் மீதும் திவ்விய பாலன் யேசு மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் பொழிவாராக! உங்கள் அனைவருக்கும் புனித நத்தார் தின வாழ்த்துக்கள், எனவும் பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தி Reviewed by Vanni Express News on 12/25/2018 04:30:00 PM Rating: 5