பிரதமர் தலைமையில் வெள்ள அனர்த்தம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

சீரற்ற காலநிலையால் அண்மையில் ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளன. 

அந்த வகையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சியில் இன்று (28) ஆரம்பமானது. 

இக்கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நடைபெறுகின்றது. 

இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். Image may contain: 1 person, sky, outdoor and natureImage may contain: 3 people, people standing, tree, sky, grass, outdoor and nature
பிரதமர் தலைமையில் வெள்ள அனர்த்தம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் பிரதமர் தலைமையில் வெள்ள அனர்த்தம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் Reviewed by Vanni Express News on 12/28/2018 03:35:00 PM Rating: 5