ஐ.தே. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சனுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை ஒன்றை விடுத்துள்ளது. 

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் தௌிவு படுத்துவதற்காக டிசம்பர் 7 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது 14 நபர்களின் சாட்சியங்கள் மற்றும் வழக்கிற்கான 08 பொருட்களை சட்ட மா அதிபர் நீதிமன்றில் சமர்பித்திருந்தார். 

விடயங்களை கருத்திற் கொண்ட நீதிமன்றம் வழக்கை டிசம்பர் 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் தொடர்ந்து விசாரணை செய்ய உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐ.தே. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சனுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை ஐ.தே. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சனுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை Reviewed by Vanni Express News on 12/03/2018 06:24:00 PM Rating: 5