“நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும்” - ரிஷாட் நம்பிக்கை!

-ஊடகப்பிரிவு

நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும் என்ற பூரண நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்ற கலைப்பு தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் விசாரணைகள் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் கூறியதாவது, “ஜனாதிபதி தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி, பாராளுமன்றத்தை கலைத்த போது, நீதிமன்றமே எம்மை பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட வைத்து, அங்கே செல்லக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தது. நீதித்துறையானது இலங்கையில் சுயாதீனமாகவும், நேர்மையாகவும் செயல்படுகின்றது என்பதை நாங்கள் நம்புகின்றோம்.

ஜனாதிபதி தான் செய்த தவறை மீண்டும் திருத்திக்கொள்ளுமாறு கேட்டிருந்தோம். அரசியலமைப்பில் அவரால் போடப்பட்டுள்ள ஓட்டையை அவரே சரி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த விடயத்தில் நாங்கள் விடாப்பிடியாக இருக்கின்றோம்” என்றார்.
“நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும்” - ரிஷாட் நம்பிக்கை! “நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும்” - ரிஷாட் நம்பிக்கை! Reviewed by Vanni Express News on 12/05/2018 06:03:00 PM Rating: 5