சின்னம்மை நோயின் தாக்கத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள்

-ஐ. ஏ. காதிர் கான்

உலகம் முழுவதும் மீண்டும் சின்னம்மை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் சின்னம்மை நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை, 30 சத வீதத்தால் அதிகரித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில், 67 இலட்சம் பேருக்கு சின்னம்மை நோய் தொற்றியிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் இளம் பிள்ளைகள் ஆவார். நோய் தாக்கி ஒரு இலட்சத்திற்கும் மேலானோர் பலியாகி இருந்தனர்.

சின்னம்மை நோயை முற்றாக இல்லாதொழிக்கும் முயற்சியில் முன்னேற்றம் தென்பட்டாலும், இந்த முன்னேற்றம் கடந்தாண்டு பின்னோக்கி திரும்பியிருப்பதாகவும், சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. தடுப்பு மருந்தேற்றலில் நிலவும் குறைபாடுகளே, இதற்குக் காரணமாகும் என்றும், ஸ்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை வாழ் பெற்றோர்களும் தமது குழந்தைகளுக்கு தடுப்பு மருந்தேற்றல் தொடர்பில், மிகவும் விழிப்புடனும், அவதானத்துடன் செயற்படுமாறும், சின்னம்மை நோயின் தாக்கத்திலிருந்து தமது குழந்தைகளைக் காப்பாற்றிக் கொள்ளுமாறும், உலக சுகாதார ஸ்தாபனத்தை மேற்கோள்காட்டி, இலங்கையிலுள்ள சுகாதார வைத்தியர்கள், பெற்றோர்களுக்கு ஆலோசணை வழங்கியுள்ளனர்.
சின்னம்மை நோயின் தாக்கத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள் சின்னம்மை நோயின் தாக்கத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள் Reviewed by Vanni Express News on 12/03/2018 05:28:00 PM Rating: 5