அரசியலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் அந்த 51 நாட்கள் என்ற புத்தகத்தை எழுதுவேன் - அமைச்சர் ரவூப் ஹக்கீம்

இலங்கையில் கடந்த 51 நாட்களாக நிலவிய அரசியல் குழப்பங்கள் தொடர்பில் நானும் ஒரு புத்தகம் எழுதவேண்டும். 

அந்தப் புத்தகத்தை இப்பொழுதே எழுதினால் அது இன்னும் பல சர்ச்சைகளை உருவாக்கிவிடும். 

ஆகவே, நான் அரசியலிருந்து ஓய்வுபெற்ற பின்னர்தான் ‘அந்த 51 நாட்கள்’ என்ற புத்தகத்தை எழுதுவேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டில், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட நவீன தெருமின்விளக்குகளை திறந்துவைத்த பின்னர் கல்முனையில் நடைபெற்ற ‘எழுச்சியால் எழுவோம்’ பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.Image may contain: 11 people, people on stage and crowdImage may contain: 8 people, people smiling, people sittingImage may contain: 10 people, people smiling, people sitting and people on stageImage may contain: 4 people, people smiling, people standingImage may contain: 5 people, people smiling
அரசியலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் அந்த 51 நாட்கள் என்ற புத்தகத்தை எழுதுவேன் - அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசியலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் அந்த 51 நாட்கள் என்ற புத்தகத்தை எழுதுவேன் - அமைச்சர் ரவூப் ஹக்கீம் Reviewed by Vanni Express News on 12/25/2018 01:58:00 AM Rating: 5