வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் விஜயம்

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (29) நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டார். 

இதேவேளை, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைய, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அனர்த்த நிவாரண செயலணி மூலம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிணறுகள் உள்ளிட்ட நீர் பெறும் மூலங்கள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. 

இப்பணியில் ஈடுபடுவதற்காக நாட்டின் நாலாபுறங்களில் இருந்தும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்கள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Image may contain: 4 people, tree, outdoor and natureImage may contain: 3 people, people standing, beard, shoes, outdoor and natureImage may contain: 2 people, people standing, shoes, child, grass, outdoor and natureImage may contain: 5 people, people smiling, people standing, tree, plant, outdoor and natureImage may contain: 14 people, people smiling, people standing and outdoor

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் விஜயம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் விஜயம் Reviewed by Vanni Express News on 12/30/2018 03:24:00 PM Rating: 5