போக்குவரத்து கட்டணங்கள் குறைகிறது

26 ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த தினங்களில் ஏற்பட்ட எரிபொருள் விலை மாற்றத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் பேருந்து கட்டணங்கள் நூற்றுக்கு 4 வீதத்தினால் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறைந்த பட்ச கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, முச்சக்கர வண்டிக் கட்டணமும் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் ஆரம்ப கட்டணம் 10 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

எனவே 60 ரூபாவாக இருந்த ஆரம்ப கட்டணம் 50 ரூபா வரையில் குறைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணமும் குறைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

நூற்றுக்கு 3 வீதத்தினால் குறித்த கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

குறித்த அனைத்து கட்டணங்களும் 26 ஆம் திகதி நள்ளிரவு முதல் குறைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து கட்டணங்கள் குறைகிறது போக்குவரத்து கட்டணங்கள் குறைகிறது Reviewed by Vanni Express News on 12/24/2018 11:20:00 PM Rating: 5