பிச்சைக்காரன் கொலைகாரனாக மாறிய சம்பவம்

குருவிட்ட பேருந்து நிலையத்திற்கு அருகில் பிச்சைகாரர் ஒருவர் தாக்கியதில் மற்றுமொரு பிச்சைக்காரர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (22) இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரு பிச்சைக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் காயமடைந்த நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிச்சைக்காரன் கொலைகாரனாக மாறிய சம்பவம் பிச்சைக்காரன் கொலைகாரனாக மாறிய சம்பவம் Reviewed by Vanni Express News on 12/23/2018 05:19:00 PM Rating: 5