நாவலப்பிட்டி மற்றும் இங்கிரியவி்ல் ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி

நாவலப்பிட்டி மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேசங்களில் ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

நாவலபிட்டி மகவலி கங்கைக்கு நீராட சென்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கபட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றதாக நாவலபிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குறித்த இளைஞனின் வீட்டுக்கு காலி பகுதியில் இருந்து வந்திருந்த உறவினர்களோடு மகவலி கங்கைக்கு இரண்டு இளைஞர்களும் ஒரு சிறுமியும் நீராட சென்றுற்றனர். 

இதன்போது நீரில் மூன்று பேரும் நீரில் அடித்து செல்வதை கண்ட பொதுமக்கள் காலி பகுதியை சேர்ந்த சிறுமியையும் இளைஞனையும் உயிருடன் மீட்டெடுத்துள்ளனர். 

நாவலப்பிட்டி பலலேகம பகுதியை சேர்ந்த 20 வயதுடைய ரஞ்சித்குமார் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். 

இதுதவிர இங்கிரிய பிரதேசத்தில் மாவக் ஓயாவில் மூழ்கியதில் இருபத்தொரு வயதுடைய இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 
நாவலப்பிட்டி மற்றும் இங்கிரியவி்ல் ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி நாவலப்பிட்டி மற்றும் இங்கிரியவி்ல் ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி Reviewed by Vanni Express News on 12/08/2018 11:12:00 PM Rating: 5