கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்

திவுலுபிட்டிய, மரதகஹமுல பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். 

நேற்று (04) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

42 வயதுடைய திலூஷ சஞ்சீவனி லிவோரா எனும் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பெண் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவருடைய கணவர் வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த பெண்ணின் கணவர் நீர்கொழும்பு சென்று வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் பின் கதவு திருக்கப்பட்டிருந்ததினால் வீட்டிற்குள் நுழைந்த அவர், வீட்டின் அறைக்குள் அவருடைய மனைவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதனை அவதானித்துள்ளார். 

குறித்த பெண்ணின் கழுத்து மற்றும் கால் பகுதிகளில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த பெண் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் திவுலுபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண் Reviewed by Vanni Express News on 12/05/2018 06:28:00 PM Rating: 5