கோப்பா பிலவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆயிரத்து ஒரு மரங்கள் நடும் திட்டம்

Toronto Blues Development Foundation Canada ஏற்பாட்டில்  கோப்பா பிலவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆயிரத்து ஒரு மரங்கள் நடும் திட்டம் பாடசாலை வளாகத்தினுள் நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் நடைபெற்றது.

 இந்த நிகழ்வில் கரைத்துறைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி ஸ்ரீபுஷ்பகாந், மனித உரிமைகள் மற்றும் இயற்கை வள பாதுகாப்பு அமைப்பின் கௌரவ உப தலைவர் (தேஷமாணி,தேஷகீர்த்தி) உவைஸ் மற்றும் அமைப்பின் பணிப்பாளர் இளைஞர் உரிமை மற்றும் பயிற்சி பயிற்றுநர் முகமது முfபாத் (சமூக நல உளவியல் ஆலோசகர்)  அவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், ஆதிபர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி உறுப்பினர்கள் , எழுத்தாளர்கள் , கிராம பொது அமைப்பினர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பாடசாலை வளாகத்தினுள் நேற்று முன்தினம் பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

முக்கிய  குறிப்பு :-
கஷ்டப் பிரதேச பாடசாலைக்கு இந்த வேலைத்திட்டத்தை செய்வதற்கு முன் வந்துள்ளது Toronto Blues Development Foundation Canada.

ஊடகப்பிரிவு - 
மனித உரிமைகள் மற்றும் இயற்கை வள பாதுகாப்பு அமைப்பு,
இலங்கை.
கோப்பா பிலவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆயிரத்து ஒரு மரங்கள் நடும் திட்டம் கோப்பா பிலவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆயிரத்து ஒரு மரங்கள் நடும் திட்டம் Reviewed by Vanni Express News on 12/08/2018 03:17:00 PM Rating: 5