சீதுவை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயம்

-ஐ. ஏ. காதிர் கான்

சீதுவை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சீதுவை, லியனகேமுல்ல பிரதேசத்தில், நேற்று (19) அதிகாலை 2.30 மற்றும் 3.00 மணிக்கிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்திலுள்ள, இரவு விடுதி ஒன்றில் இத்துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விடுதிக்குள் நுழைந்த குழுவொன்றுக்கும், விடுதியின் பணியாளர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த் தகராறு காரணமாகவே, இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் விடுதிக்குள் நுழைந்த, சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான நபர் ஒருவர் காயமடைந்து, நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விடுதியின் உரிமையாளரினால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சந்தேக நபர், அப்பிரதேசத்தை விட்டும் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் சீதுவைப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
சீதுவை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயம் சீதுவை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயம் Reviewed by Vanni Express News on 12/19/2018 05:00:00 PM Rating: 5