பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் மீது துப்பாக்கி பிரயோகம்

தங்கல்ல பகுதியில் பொலிஸாரின் சமிஞ்ஞையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். 

நேற்று (25) குடாவெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய அப்பகுதி பூராகவும் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அதகடிப்படையில் இன்று (26) அதிகாலை 1.30 மணியளவில் குடாவெல்ல சந்தியில் பொலிஸார் கடமைகளில் ஈடுபட்டு இருந்தனர். 

இதன்போது அப்பகுதி வழியாக வந்த வேன் ஒன்றை பொலிஸார் நிறுத்த முற்பட்ட போது பொலிஸாரின் கட்டளையை மீறி குறித்த வேன் பயணித்துள்ளது. 

இதனால் அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரினால் குறித்த வேன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இருப்பினும் குறித்த வேன் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் மீது துப்பாக்கி பிரயோகம் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் மீது துப்பாக்கி பிரயோகம் Reviewed by Vanni Express News on 12/26/2018 10:07:00 PM Rating: 5