மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். 

கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மஹிந்த ராஜபக்ஷ ஒவ்வொரு மாதமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அங்கத்துவ கட்டணத்தை செலுத்துவதாகவும், 3000 ரூபாவை தனது பாராளுமன்ற செலவுகளில் குறைத்துக்கொள்வதற்கு அவர் அனுமதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

அதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மாதந்தம் கட்டணம் செலுத்துவதனால் அவர் கட்சி உறுப்பினராக இருப்பதற்கான அனைத்து தகுதிகளும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் அவர் கட்சியின் ஆலோசகராக இருப்பதாகுவம் அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த மாநாட்டின் போதும் அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டதாகவும் எந்தவொரு சந்தர்ப்பதிலும் அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் Reviewed by Vanni Express News on 12/19/2018 05:17:00 PM Rating: 5