மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவினர்

-ஐ. ஏ. காதிர் கான்

மேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான நவுசர் பௌசி மற்றும் கீர்த்தி காரியவசம் ஆகியோர், ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தமது ஆதரவுகளைத் தெரிவித்துள்ளனர்.

இருவரும் தமது தீர்மானம் தொடர்பில் இன்று (04) சபை கூடியபோது இச்சபையில் தௌிவுபடுத்தியுள்ளனர்.

தற்போதுள்ள நிர்வாகத்தினருடன் தம்மால் பணிபுரிய முடியாது. எனவேதான், எதிர்க் கட்சி வரிசையில் நாம் இருவரும் அமர்ந்து கொண்டோம் என்று, மேல் மாகாண சபை உறுப்பினர் கீர்த்தி காரியவசம் இதன் போது தெரிவித்துள்ளார்.

ஆளும் கூட்டமைப்பு மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்க் கட்சிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தோம் என்றும், அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவினர் மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவினர் Reviewed by Vanni Express News on 12/04/2018 11:41:00 PM Rating: 5