எதிர்வரும் வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை மாற்ற ஐக்கிய தேசிய கட்சி தயார்

எதிர்வரும் வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்பார்க்காத அளவிலான மாற்றங்களை எதிர்ப்பார்ப்பதாக ​ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

இன்று (28) கம்பஹா பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதேவேளை அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களுக்கு தீர்வொன்றை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியை பிளவு படுத்துவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சியினால் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எஸ்.பீ திஸாநாயக்க உட்பட 16 பேர் அடங்கிய குழு தற்போது பிரதிபலனை அனுபவித்துக் கொண்டிருப்பதாகவம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை மாற்ற ஐக்கிய தேசிய கட்சி தயார் எதிர்வரும் வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை மாற்ற ஐக்கிய தேசிய கட்சி தயார் Reviewed by Vanni Express News on 12/28/2018 04:21:00 PM Rating: 5