நாடுமுழுவதும் குளிரான வானிலை நிலவும்

நாடு முழுவதிலும் மழை அற்ற குளிரான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் கிழக்கு மாகாணம் மற்றும் பதுளை, மாத்தளை பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அதிக மழை காரணமாக வடக்கு மாகாணத்தில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் தொடர்ந்தும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 5 பேருக்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான 14 இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நாடுமுழுவதும் குளிரான வானிலை நிலவும் நாடுமுழுவதும் குளிரான வானிலை நிலவும் Reviewed by Vanni Express News on 12/30/2018 11:44:00 PM Rating: 5