கொழும்பு நகரிலுள்ள 100 அரச நிறுவனங்கள் பத்தரமுல்லைக்கு இடம் மாற்றம்

-மினுவாங்கொடை நிருபர் ஐ. ஏ. காதிர் கான்

கொழும்பு நகரை அண்டியுள்ள சுமார் 100 அரச நிறுவனங்களை, பத்தரமுல்லையில் அமைக்கப்படும் நிர்வாக நகரத்திற்கு இடம் மாற்ற, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

இதனுடன் இணைந்ததாக, சில வருடங்களில் கடுவெலவுக்கும் புறக்கோட்டைக்கும் இடையில் இலகு ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லை நகர வலயத்தை, நிர்வாக நகரமாக அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

கொழும்பை அண்டியுள்ள சுமார் 100 அரச நிறுவனங்களை இந்த வலயத்திற்குக் கொண்டு வர எதிர்பார்க்கிறோம். இதனுடன் இணைந்ததாக இங்குள்ள சுற்றுச் சூழலும் மேம்படுத்தப்படும். மத்திய வர்க்கத்திற்கு உகந்தாக, இந்தப் பிரதேசம் உருவாகும்.

கடந்த காலத்தில் நிர்மாணத்துறையும் சுற்றுலாத் துறையும் வளர்ச்சி கண்டது. எதிர்வரும் சில வருடங்களில், நிர்மாணத்துறையைச் சார்ந்த பாரிய வளர்ச்சியை, இந்தப் பிரதேசம் காணும் என்று, அமைச்சர் பாட்டலி சம்பிக்க தெரிவித்தார்.
கொழும்பு நகரிலுள்ள 100 அரச நிறுவனங்கள் பத்தரமுல்லைக்கு இடம் மாற்றம் கொழும்பு நகரிலுள்ள 100 அரச நிறுவனங்கள் பத்தரமுல்லைக்கு இடம் மாற்றம் Reviewed by Vanni Express News on 1/09/2019 04:27:00 PM Rating: 5