புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­ட சம்பவம் - 7 பேர் நீதிமன்றில் ஆஜர்


மாவ­னெல்லை மற்றும் அண்மித்த  பகு­தி­களில்  இரவில் 4 இடங்­களில் புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 7 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கைதான அனைவரும் இன்று - 02 முற்பகல் மாவனல்லை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டனர். 

இதனை அடுத்து குறிப்பிட்ட சந்தேக நபர்களை 14 நாட்களுக்கு ( 16 ஆம் திகதி வரை ) விளக்கமறியலில் வைக்குமாறும்,  சம்பவம்    தொடர்பில் சி ஐ டி விசாரணைகள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட சந்தேக நபர்களை மாவனல்லை தவிர இலங்கையில்  மற்ற இடங்களில்  இதற்குமுன்னர் புத்தர் சிலைகள்  சேதமாக்கபட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யவும் சி ஐ டிஇ நீதிமன்றில் அனுமதி கேட்டு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்  இருவர் தேடப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­ட சம்பவம் - 7 பேர் நீதிமன்றில் ஆஜர் புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­ட சம்பவம் - 7 பேர் நீதிமன்றில் ஆஜர் Reviewed by Vanni Express News on 1/02/2019 02:32:00 PM Rating: 5