மோட்டார் சைக்கிள் கெப் வாகனத்துடன் மோதி விபத்து - இளைஞர் ஒருவர் பலி

வாத்துவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதியில் தல்பிட்டி சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறுக்கி வீதி ஒன்றில் இருந்து காலி வீதிக்கு பிரவேசிக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள் காலி நோக்கி பயணித்த கெப் வாகனத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் விபத்தில் காயமடைந்து பாணந்துரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் கெப் வாகனத்துடன் மோதி விபத்து - இளைஞர் ஒருவர் பலி மோட்டார் சைக்கிள் கெப் வாகனத்துடன் மோதி விபத்து - இளைஞர் ஒருவர் பலி Reviewed by Vanni Express News on 1/12/2019 03:27:00 PM Rating: 5