அனுராதபுரம் - மிஹிந்தலை பிரதான வீதியில் விபத்து - ஒருவர் பலி - இருவர் காயம்

அனுராதபுரம் - மிஹிந்தலை பிரதான வீதி கன்னடிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் அதே பிரதேசத்தினை சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வீதியின் குறுக்காக பயணிக்க முற்பட்ட போது அதிவேகத்தில் பயணித்த உந்துருளி ஒன்று மோதுண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த பெண் அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உந்துருளியில் பயணித்த இருவரும் காயமடைந்து அனுராதபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனுராதபுரம் - மிஹிந்தலை பிரதான வீதியில் விபத்து - ஒருவர் பலி - இருவர் காயம் அனுராதபுரம் - மிஹிந்தலை பிரதான வீதியில் விபத்து - ஒருவர் பலி - இருவர் காயம் Reviewed by Vanni Express News on 1/13/2019 04:26:00 PM Rating: 5