பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து - இருவர் பலி

மனப்பிட்டிய பகுதியில் இன்று (15) காலை 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளார். 

மனம்பிட்டிய பகுதியில் இருந்து தளுகான நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மூவரே இவ்வாறு விபத்துக்களாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளதடன் மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கதறுவெலயில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்து தனியார் பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் எதிரில் வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதன்போது மோட்டார் சைக்கிள் பேருந்தில் சில்லுகளில் சிக்கியதில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

16, 17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும் விபத்துடன் தொடர்புடை டிப்பர் வாகன ஓட்டுனர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து - இருவர் பலி பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து - இருவர் பலி Reviewed by Vanni Express News on 1/15/2019 05:44:00 PM Rating: 5