ஜனாதிபதி பாதுகாப்புக்காக சென்ற இராணுவ வாகனம் விபத்து - இரு பலி - நால்வர் காயம்

முல்லைத்தீவு, நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரிகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். 

இராணுவ வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இன்று (21) மதியம் 1 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் இராணுவ மேஜர் ஒருவரும், கேப்ரால் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முல்லைத்தீவில் ஜனாதிபதி பாதுகாப்புக்காக சென்ற இராணுவ வாகனம் பணியை நிறைவு செய்து வவுனியாவிற்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் காயமடைந்த நால்வரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.625.0.560.320.160.600.053.800.700.160.90%2B%25283%2529625.0.560.320.160.600.053.800.700.160.90%2B%25284%2529625.0.560.320.160.600.053.800.700.160.90%2B%25282%2529
ஜனாதிபதி பாதுகாப்புக்காக சென்ற இராணுவ வாகனம் விபத்து - இரு பலி - நால்வர் காயம் ஜனாதிபதி பாதுகாப்புக்காக சென்ற இராணுவ வாகனம் விபத்து - இரு பலி - நால்வர் காயம் Reviewed by Vanni Express News on 1/21/2019 11:33:00 PM Rating: 5