புகையிரதத்துடன் லொறி மோதி விபத்து நான்கு இராணுவத்தினர் படுகாயம்

குருணாகல், வெல்லாவ புகையிரத கடவையில் லொறி ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் நால்வர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று (22) அதிகாலை திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம் ஒன்றில் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இராணுவ மேஜர் ஒருவர் உட்பட இராணுவத்தினர் நால்வரே இவ்வாறு காயமடைந்துள்ளனர். 

விபத்தில் காயமடைந்தவர்கள் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விபத்தில் லொறி பாரிய அளவில் சேதமடைந்துள்ளதுடன் புகையிரதமும் சேதமடைந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் வெல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புகையிரதத்துடன் லொறி மோதி விபத்து நான்கு இராணுவத்தினர் படுகாயம் புகையிரதத்துடன் லொறி மோதி விபத்து நான்கு இராணுவத்தினர் படுகாயம் Reviewed by Vanni Express News on 1/22/2019 04:46:00 PM Rating: 5