கல்பிட்டியில் கோர விபத்து ஒருவர் பலி

கல்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்பிட்டி - பாலாவி வீதியின் 38 மற்றும் 39 ஆம் கட்டை பகுதிக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கெப் ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

நேற்று (30) மாலை 6.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

கல்பிட்டி, குரிஞ்சம்பிட்டிய பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் கெப் வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்பிட்டியில் கோர விபத்து ஒருவர் பலி கல்பிட்டியில் கோர விபத்து ஒருவர் பலி Reviewed by Vanni Express News on 1/31/2019 04:30:00 PM Rating: 5