பாதையை கடக்க முற்பட்ட 11 வயதுடைய பாடசாலை மாணவன் பரிதாபமாக பலி

கம்பஹா, அக்கரகம கொடிகமுவ மஹா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள பாதசாரிகள் கடவையில் வேன் ஒன்றுடன் மோதி 11 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். 

இன்று (07) காலை 6.40 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

காலையில் விளையாட்டு பயிற்சிக்காக குறித்த மாணவன் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் தந்தையுடன் வருகை தந்து பாதையை கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் நீர்கொழும்பில் இருந்து மீரிகம நோக்கி பயணித்த வேன் ஒன்று குறித்த சிறுவன் மீது மோதியுள்ளது. 

விபத்து ஏற்பட்ட போது குறித்த சிறுவன் தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்த வடிகானில் தலை பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தலையில் பலத்த காயத்துடன் அகரகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளான். 

கம்பஹா, அக்கரகம கொடிகமுவ மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அசான் மதூஷக என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். 

சம்பவம் தொடர்பில் வேனின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொட்டதெனியாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதையை கடக்க முற்பட்ட 11 வயதுடைய பாடசாலை மாணவன் பரிதாபமாக பலி பாதையை கடக்க முற்பட்ட 11 வயதுடைய பாடசாலை மாணவன் பரிதாபமாக பலி Reviewed by Vanni Express News on 1/07/2019 11:38:00 PM Rating: 5